பொது செய்தி

தமிழ்நாடு

12 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 7.56 கோடி ரூபாய் உதவித்தொகை

Added : டிச 29, 2020
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 12 ஆயிரத்து, 600 விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 7.56 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் உதவித்தொகை திட்டத்தில், இந்த ஆண்டுக்கான, மூன்றாவது தவணை தொகை 2,000 ரூபாய், ஒன்பது கோடி விவசாயிகளுக்கு வழங்குவதை, பிரதமர் மோடி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேரலையாக, அன்னுார் வேளாண் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டது.துணை வேளாண் அலுவலர் முருகன்
 12 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 7.56 கோடி ரூபாய் உதவித்தொகை

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 12 ஆயிரத்து, 600 விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 7.56 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் உதவித்தொகை திட்டத்தில், இந்த ஆண்டுக்கான, மூன்றாவது தவணை தொகை 2,000 ரூபாய், ஒன்பது கோடி விவசாயிகளுக்கு வழங்குவதை, பிரதமர் மோடி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேரலையாக, அன்னுார் வேளாண் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டது.துணை வேளாண் அலுவலர் முருகன் பேசுகையில், '' திட்டத்தில், சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் இணையலாம். இதில் உதவித்தொகை பெற விரும்புவோர், சிட்டா, ஆதார் அட்டை வங்கி பாஸ் புத்தகம், ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன், அருகில் உள்ள பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர் அல்லது மாதத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் அமைப்பு பதவி வகிப்பவர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் விண்ணப்பிக்க இயலாது.இவ்வாறு, அவர் பேசினார்.வேளாண்மை அலுவலர் திவ்யா பேசுகையில், ''அன்னுார் வட்டாரத்தில், 12 ஆயிரத்து, 600 விவசாயிகள், ஆண்டுக்கு, ரூ.6,000 வீதம், 7 கோடியே 56 லட்சம் ரூபாய் பெற்று வருகின்றனர். இதில் விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்,'' என்றார்.பிரதமர் மோடியின் நேரலை நிகழ்ச்சி முடிந்தவுடன், அதனுடைய தமிழாக்கத்தில் விளக்கினர். உதவித்தொகை, வங்கி கணக்கு குறித்து விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, அலுவலர்கள் பதிலளித்தனர். உதவி வேளாண் அலுவலர்கள் மகாலிங்கம், கோகிலா, செந்தில்குமார், பூபாலன் 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X