பொது செய்தி

தமிழ்நாடு

டோல்கேட்டில் கட்டண வசூல் பிரச்னை: தீர்வு காண முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம்

Added : டிச 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கணியூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில், அவிநாசி சாலையில் டோல்கேட் செயல்படுகிறது. இதை கடந்து செல்லும் வாகனங்களிடம், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள கிராமங்களில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு
 டோல்கேட்டில் கட்டண வசூல் பிரச்னை: தீர்வு காண முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம்

கருமத்தம்பட்டி:கணியூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில், அவிநாசி சாலையில் டோல்கேட் செயல்படுகிறது. இதை கடந்து செல்லும் வாகனங்களிடம், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள கிராமங்களில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என, பல தரப்பினரும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பல போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின், ரூ.150க்கு பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜன., 1ம் தேதி முதல் 'பாஸ்டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் வாகன உரிமையாளர்களும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சோமனுாரில் உள்ள திருமண மண்டபத்தில், கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. 'உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். பழைய முறைப்படி பாஸ் வழங்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., கந்தசாமி பேசுகையில், ''பல்வேறு தொழில் நிறுவனங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளன. வாகனங்கள் அடிக்கடி சென்று வர வேண்டிய நிலை உள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு தனி சர்வீஸ் ரோடு விட வேண்டும். கூடுதல் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லையென்றால் டோல்கேட்டை வேறு பகுதிக்கு மாற்றி விடுங்கள்,'' என்றார்.டோல்கேட் தரப்பில் அதிகாரி ராஜ்மோகன் பேசுகையில், ''இப்பகுதி மக்களின் கோரிக்கைகள், மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படும்,'' என்றார். கோவை வரும் முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இப்பிரச்னை குறித்து மனு அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி., சூரிய மூர்த்தி பேசுகையில், ''இப்பிரச்னைக்கு, சில நாட்களில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202017:16:19 IST Report Abuse
Ram Pollachi ஆத்துப்பாலத்தின் இன்றைய நிலை நடு ரோட்டில் மனிதர்களும், மாடுகளும் உறங்குகிறது. வலது, இடது பக்கத்தில் வாகனங்களின் ஆக்கிரமிப்பு. மாடு, குதிரை வண்டி மற்றும் கால்நடையாக போகும் போது வராத உப்புசம் ஏசி வண்டியில் போனால் வருது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X