மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில், கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், உதவி வேளாண் அலுவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் குடியிருக்கும் அலுவலர்கள், வீடாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தனர். விவசாயம் மேற்கொள்வதில், விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவற்றை நிவர்த்தி செய்து, புதிய தொழில்நுட்பத்தை சொல்லிக் கொடுக்கும் பணிகளில், இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு கட்டடம் இடிந்த நிலையில் உள்ளது. அதனால் உதவி வேளாண் அலுவலர் வெளியே தங்கி வருகின்றனர். இக்கட்டடத்தை பயன்படுத்தாமல் விட்டதால், மிகவும் மோசமடைந்தது. இரவில் இங்கு, சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இக்கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய அலுவலக கட்டடம் கட்டும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE