திருப்பூர்:'நடிகர் விஜயை போல் அனைத்து நடிகர்களும் தங்களை வளர்த்துவிட்ட திரையரங்குகளை நினைத்து பார்க்க வேண்டும்' என, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:விஜய் தனது 'மாஸ்டர்' திரைப்படத்தை, ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதை தவிர்த்துள்ளார். தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்பதில் உறுதியாக உள்ளார். அனைத்து நடிகர்களும் ஓ.டி.டி., தளத்தில் தங்களது படத்தை வெளியிடுவதை தவிர்த்தால் மட்டுமே, சினிமாவை பாதுகாக்க முடியும்.
ஓ.டி.டி., தளத்தில் படங்களை வெளியிட விரும்பும் நடிகர்கள், எங்களை புறக்கணிக்கின்றனர். வரும் நாட்களில், தியேட்டர் உரிமையாளர்களும் அந்த நடிகர்களை புறக்கணிக்கும் காலம் வரும். நடிகர் விஜயை போல், அனைத்து நடிகர்களும் தங்களை வளர்த்துவிட்ட திரையரங்குகளை நினைத்து பார்க்க வேண்டும்.தியேட்டர்களுக்கான சேவை வரி, எட்டு சதவீதத்தில் இருந்து முற்றிலும் தளர்த்த அரசிடம் கோரப்பட்டுள்ளது. அப்போது, டிக்கெட் கட்டணம் குறையும். அதேபோல், நடிகர்கள், தங்களது படத்தை, திரையரங்குகளில், எட்டு வாரங்கள் ஓட்டிய பின்னரே ஓ.டி.டி., தளத்தில் வெளியிட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE