பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன் சென்று ஊட்டி வந்த இருவருக்கு தொற்று உறுதி

Added : டிச 29, 2020
Share
Advertisement
ஊட்டி:பிரிட்டனில் இருந்து ஊட்டி வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.பிரிட்டனில் புதிய வைரஸ் தொற்று உருவாகியிருப்பதால், அங்கிருந்து, தமிழகம் வரும் பயணிகளை சுகாதாரத் துறையினர், பரிசோதனைக்கு உட்படுத்தி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரிட்டனில் இருந்து, கடந்த, 25ம் தேதி, 16 பேர் விமானத்தில், சென்னை வழியாக கோவை

ஊட்டி:பிரிட்டனில் இருந்து ஊட்டி வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.பிரிட்டனில் புதிய வைரஸ் தொற்று உருவாகியிருப்பதால், அங்கிருந்து, தமிழகம் வரும் பயணிகளை சுகாதாரத் துறையினர், பரிசோதனைக்கு உட்படுத்தி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரிட்டனில் இருந்து, கடந்த, 25ம் தேதி, 16 பேர் விமானத்தில், சென்னை வழியாக கோவை வந்து அங்கிருந்து, ஊட்டிக்கு வந்தனர். இவர்களில், 14 பேரின் வீடுகளுக்கு சென்று, சுகாதாரத் துறையினர், பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தினர். இதில், இருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நீலகிரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், அருவங்காடு பகுதியை சேர்ந்த இருவர் சென்னையில் தங்கி, இரு நாட்களுக்கு முன், இங்கு வந்தனர். பரிசோதனைக்கு உட்படுத்தியதில், இருவருக்கும் தொற்று இருந்தது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் தொற்று உள்ளது. மூவரும் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, மாதிரிகள் புனே சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X