வடவள்ளி:மருதமலை அடிவாரத்தில், காட்டு யானை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார்.கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் முகமது நியாஸ், 65. மருதமலை அடிவாரத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை, 5:50 மணிக்கு, தான் தங்கியிருந்த இடத்திலிருந்து, டீக்கடைக்கு செல்வதற்காக மருதமலை மெயின் ரோட்டில் சென்றுள்ளார்.அப்போது, சட்டக்கல்லுாரி பின்புறமுள்ள வனப்பகுதியில் இருந்து, மருதமலை ரோட்டை நோக்கி வந்த காட்டு யானை, முகமது நியாஸை தாக்கி மிதித்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வடவள்ளி போலீசார், உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். 'யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், மருதமலை அடிவார பகுதி சாலையில், அதிகாலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு வரவேண்டாம்' என, அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE