கோவை:நடப்பாண்டில் இதுவரை, கோவை மாநகரில், 827 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.நடப்பாண்டு, கொரோனாவினால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பலரும் தங்களது பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொண்டனர். ஊரடங்கால் குற்றச்சம்பவங்கள், வாகன விபத்துகள் குறைந்தன. ஆனால், தற்கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. கோவை மாநகரில் நடப்பாண்டு இதுவரை, 827 பேர் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துள்ளனர். இதில் ஆண்கள் தான், அதிகளவு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.போலீசார் கூறுகையில்,'கடந்த, 2019ம் ஆண்டு, 847 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தாண்டு தற்கொலை செய்த, 827 பேரில், 70 சதவீதம் பேர் ஆண்கள். தொழில் நஷ்டம், வருமானமின்மை, காதல் தோல்வி, மதுப்பழக்கம் உள்ளிட்டவற்றால், தற்கொலை செய்துள்ளனர்.பெண்களுக்கு சகிப்பு தன்மை அதிகம். அதனால், அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்வதில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE