விவசாயிகளுக்காக போராட்டம்: அன்னா ஹசாரே எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்காக போராட்டம்: அன்னா ஹசாரே எச்சரிக்கை

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (33)
Share
ராலேகான் சித்தி: விவசாயிகள் தொடர்பான எனது கோரிக்கைகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது தான் தனது கடைசி போராட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக
விவசாயிகள், அன்னாஹசாரே, போராட்டம், ஹசாரே,  மத்திய அரசு  anna hazare, hazare, farmers, protest, government, farmbill

ராலேகான் சித்தி: விவசாயிகள் தொடர்பான எனது கோரிக்கைகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது தான் தனது கடைசி போராட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறேன். ஆனால், பிரச்னைகளை அரசு தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து வருகிறது. இதனால் அரசு மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. விவசாயிகள் தொடர்பான எனது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை ஜனவரி இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். இதனால், ஜனவரி இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்போம். எனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவேன். அது தான் எனது கடைசி போராட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



கடந்த 14ம் தேதி, அன்னா ஹசாரே, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், எம்எஸ்சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். விவசாய பொருட்கள் செலவு மற்றும் விலை கமிஷனுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர், பா.ஜ., மூத்த தலைவர் ஹரிபாவு பகாடே, ஹசாரேவை சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் குறித்து விளக்கியிருந்தார். இந்த சட்டத்திற்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த டிச.,8 ல், ஹசாரே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X