திருச்சி; திருச்சி ஸ்ரீரங்கத்தில் மார்கழி மங்கள உற்ஸவத்தில் பிரபல கலைஞர் ரேகா ராஜூவின் மோகினி ஆட்டம் நடைபெற்றது.
கேரளாவின் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட ரேகா ராஜூ பெங்களூரில் வசித்து வருகிறார். கலாமண்டலம் உஷா தத்தர், ராஜூ தத்தர், கோபிகா வர்மா, ஜனார்தனன் என பல நடன ஜாம்பவான்களிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டார். ரேகா ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பெர்க் பல்கலைகழகத்தில் தனது டாக்டரேட் பட்டத்தைப் பெற்று பரத நாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து மோகினி ஆட்டம் பயின்றார். யுவ கலா பாரதி, யுவ கலா பிரதிபா, அபினவ பாரதி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மோகினி ஆட்டம் குறித்து ரேகா ராஜூ கூறுகையில்; ஸ்ரீரங்கத்தின் உற்சவத்தில் நாட்டியம் ஆடியது மிக்க மகிழ்ச்சி. இந்த காலகட்டதில் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த மங்களம் நிறுவனம் மற்றும் உமாசங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களுக்கு நன்றி.பரதத்தைப் போல மோகினி ஆட்டமும் ஒரு நல்ல கலை. பரதத்தைப் போல் மோகினி ஆட்டம் இன்னும் பிரபலமாகவில்லை. என்னைப் போல் இன்னும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நிருத்யதாமா டெம்பிள் ஆஃப் ஆர்ட்ஸ் எனும் நடனப் பள்ளியை பெங்களூருவில் நடத்தி வருகிறேன். இதில் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE