அரசியல் செய்தி

தமிழ்நாடு

"கட்சி துவங்கவில்லை"- உடல்நிலையை காரணம் காட்டி நிலைமாறினார் ரஜினி

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (259)
Share
Advertisement
சென்னை: உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்கம், கொடி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வரும் டிச.,31ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக


சென்னை: உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.அரசியல் இல்லை மன்னித்து விடுங்கள்! ரஜினி உருக்கமான அறிக்கை

latest tamil news


நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்கம், கொடி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வரும் டிச.,31ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய ரஜினியிடம், கட்டாயம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என இன்று (டிச.,29) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினி தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு:


சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்


என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.


latest tamil newsஎன் உடல்நிலை கருதி படத்தின் தயாரிப்பாளர், மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.


பலிகடா ஆக்க விரும்பவில்லை


இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரசாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் 4 பேர் 4 விதமா என்னை பற்றி பேசுவார்கள். இதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.


latest tamil news
என்னை மன்னியுங்கள்


ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்படடு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். எனக்கு துணையாக இருந்த தமிழருவி மணியன், அர்ஜூனமூர்த்திக்கு நன்றி.


அரசியலுக்கு வராமல் சேவை


என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வாழ்க தமிழ் மக்கள் ! வளர்க தமிழ்நாடு ! ஜெய்ஹிந்த் !Advertisement
வாசகர் கருத்து (259)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modikumar - West Mambalam,இந்தியா
30-டிச-202011:33:43 IST Report Abuse
Modikumar திமுக வின் உளவியல் ரீதியான ட்ராமா அம்பலம். ரஜினியின் மாவட்ட பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற தனத்தால் வந்த வினை, ரஜினி கட்சி ஆரம்பித்த பின் உள்ளடி வேலையை பார்க்க இருபதுக்கு மேற்பட்ட ரஜினி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு திமுக வின் பிரஷாந்த் கிஷோர் டீம் சார்பில் ரகசியமாக தலா இருப்பது லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது, (சமீபத்தில் இதை கேள்விப்பட்ட ரஜினி அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது) மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பணம் கொடுத்த நிகழ்வை ரகசியமாய் வீடியோவாக திமுகவின் பிரஷாந்த் கிஷோர் டீம் எடுத்து வைத்துள்ளது. பிரஷாந்த் கிஷோர் டீம் ஹைதராபாத் த்தில் உள்ள அப்போலோ மருத்துவமனை டாக்டர் கல் மூலம் உளவியல் ரீதியாக ரஜினியின் மன பலத்தை உடைத்து தன் காரியத்தை நிறைவேற்றி உள்ளது.
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
30-டிச-202018:26:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு"ஹைதராபாத் த்தில் உள்ள அப்போலோ மருத்துவமனை டாக்டர் கள் மூலம் உளவியல் ரீதியாக ரஜினியின் மன பலத்தை உடைத்து" உங்க படைப்புத் திறனை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கலீங்க சவுக்கித்தார்...
Rate this:
Cancel
வெங்கட்   திருநெல்வேலி ராகவேந்திரா மணடபத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு ன்னு பில்டப் கொடுக்கும் போது இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை ன்னு வீர வசனம் பஞ்ச் டயலாக் பேசியது ஆன்மீக அரசியல் அது எல்லாம் ரஜினி வெறும் டோபாக்கா தான் னு முடிவாச்சு
Rate this:
Cancel
30-டிச-202003:59:15 IST Report Abuse
சதீஷ்   மதுரை தமிழருவி மணியன் ன்னு ஓருத்தர் ரஜினி பற்றி ஓவரா பில்டப் கொடுத்து பேட்டி கொடுத்தாரே அவரை ஆளை காணோம் அடுத்து யாரை உசுப்பேத்த போறாறோ தெரியலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X