அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி முடிவு: தலைவர்கள் கருத்து

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை: உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை எனவும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ரஜினி, அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து:பாலகிருஷ்ணன் மா., கம்யூ.. ஐதரபாத்தில் இருந்த போதும் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது பிரச்னை
Rajini, Rajinikanth, ரஜினி, ரஜினிகாந்த், தலைவர்கள்,  மா.கம்யூ., அதிமுக, அ.தி.மு.க., கடம்பூர் ராஜூ

சென்னை: உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை எனவும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ரஜினி, அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து:


பாலகிருஷ்ணன் மா., கம்யூ..


ஐதரபாத்தில் இருந்த போதும் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது பிரச்னை இல்லை. உடல் நலத்துடன் இருப்பது அவசியம் என தெரிவித்தோம். இப்போதும் உடல் நலன் முக்கியம். ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பிப்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். உடல்நிலை காரணமாக ஆரம்பிக்கவில்லை என்பதும் அவரின் விருப்பம். ஆரம்பித்தாலும் பிரச்னை இல்லை. ஆரம்பிக்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. ஆட்சி மாற்றம் என்பதை பார்த்து அவரது ரசிகர்கள் செயல்பட வேண்டும் என்பது வேண்டுகோள். அவரை கட்டாயப்படுத்தி களமிறக்கியவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.


அன்வர் ராஜா, அ.தி.மு.க.,


ரஜினி எடுத்த முடிவு அவரது உடல்நிலையை கருதி, டாக்டர்களின் அட்வைஸ் எடுத்து முடிவெடுத்துள்ளார். வரவேற்கத்தக்கது. எதற்காக கட்சி துவங்க வேண்டும் என நினைத்தாரோ அதற்காக ரசிர்களை வலியுறுத்துவார் என நினைக்கிறேன். இப்போது ஆட்சி மாற்றம் இல்லை என ஒப்பு கொண்டதால் தான் இந்த முடிவெடுத்துள்ளார். எங்களை ஆதரிக்கும்படி ரசிகர்களை வலியுறுத்துவார்.


ரஜினி சகோதரர் சத்தயநாராயணன்


அவர் உடல்நலன் நல்லா இருந்தா போதும். ரஜினி அரசியலில் சாதிக்க தேவையில்லை. ரஜினி நன்றாக இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருப்பார்கட்சி துவங்கவில்லை என்ற ரஜினியின் முடிவு இப்போது தான் தெரியும்.


அமைச்சர் கடம்பூர் ராஜூ


இது அவரின் தனிப்பட்ட முடிவு. விருப்பம். இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. அவரின் முடிவை விமர்சிப்பது தவறு. தொடங்கவில்லை என சொல்லிவிட்டார். எந்த தாக்கமும் இருக்காது. அதிமுகவின் பலம், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு உள்ள பலம் இப்போதும் உள்ளது. எம்ஜிஆரின் ஓட்டு அதிமுகவிற்கு தான் கிடைக்கும். எம்ஜிஆரை அதிமுக மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்


latest tamil news
காங்கிரஸ் ஜோதிமணி


பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கட்சி வரும் போது தாக்கம் இருந்தால்தான், வராவிட்டால் தாக்கம் இருக்கும். கள நிலவரம் பற்றி பாஜ, அதிமுக கூட்டணியை தோற்கடித்து, திமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். உடல்நலன் கருதி முடிவெடுத்திருந்தால் அதனை மதிக்கிறோம். ரஜினி முடிவினால், அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. பா.ஜ.,வுக்கு ஏமாற்றம் இருக்கலாம்.


ஆடிட்டர் குருமூர்த்தி


ரஜினி கட்சி துவங்கவில்லை என்றாலும், 1996 போன்று அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்.


மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்


ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். சென்னை சென்ற பிறகு ரஜினியை சந்தித்துவிட்டு, உங்களுக்கு செய்தி சொல்கிறேன். காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சினிமாக்காரர்கள். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும்போது தமிழகத்திற்கு மாற்றம் ஏற்பட்டு விட்டது என்பதை உணர்த்துகிறது.அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும்.சீமான்


ரஜினிகாந்த், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்.


பா.ஜ.,வின் நடிகை குஷ்புரஜினி முடிவு, ஒவ்வொரு தமிழனின் மனதையும் நொறுக்கிவிட்டது. உங்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். உங்களின் நண்பர், நலம் விரும்பி என்ற முறையில் உங்களின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு முக்கியமானவர். விலைமதிப்பற்றவர். கவனமுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள்.பா.ஜ., பொறுப்பாளர், நடிகை கவுதமி

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.அர்ஜூன மூர்த்தி

மிகுந்த வருத்தமான சூழல் ரஜினியின் இதயத்தில் தற்போது இருப்பதை அறிகிறேன். ரஜினியின் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
02-ஜன-202112:03:57 IST Report Abuse
Sathya Dhara இந்த ஆள் ஒன்றும் கழட்ட வேண்டாம். ஹிந்து மதத்தை பழித்து இறை நம்பிக்கைதனை கேலி செய்பவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள் என்று கூட ஒரு அறிக்கை விடமுடியாதா......திருட்டுத்தனமாக கட்டுமர கும்பலுக்கு குஷன் கொடுக்கிறார் போலும். சும்மா சீன் சீன் சீன் சீன் காட்டியே ஒட்டி விட்டாராய்யா.....மக்களுக்கு புத்தி இல்லையே......
Rate this:
Cancel
S.N - chennai,யூ.எஸ்.ஏ
30-டிச-202019:51:19 IST Report Abuse
S.N படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு மற்றும்கொரோனா மருத்துவ சோதனை இருந்தும் நான்கு பேர் பாதிப்பு மற்றவரை பலிகடா ஆக்க விரும்பவில்லை என சொன்னவர் ரசிகனின் உடல்நிலை முக்கியம் என்று தன் படங்களை பார்க்க வராதீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-டிச-202004:10:22 IST Report Abuse
J.V. Iyer தனி ஒருவரால் கட்சி ஆரம்பிப்பதற்கு முன், அரசியலுக்கு வருவதற்கு முன், இவ்வளவு தூரம் எல்லா கட்சிகளையும் கலக்கமுடியும், கலங்கடிக்கமுடியும் என்றால் அது ரஜினி சார் ஒருவரால் மட்டுமே. நலம் பெற ரஜினிக்கு வாழ்த்துக்கள். நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். அரசியலில் ஒரு மாற்றமும் இல்லை. மாற்றி.. மாற்றி.. ஸ்டாப்... அதுதான் பாஜக வந்துவிட்டதே ரஜினி சார் ஆதரிக்க
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
04-ஜன-202117:39:22 IST Report Abuse
Sathya Dhara இந்த ஆள் வாயை திறந்து, திமுகவிற்கு ஒட்டு போடாதே. ஹிந்து எதிர்ப்பு கட்சி, ஈவில் ஈவேரா கட்சி, பாஜகவின் கைகளை பலப்படுத்துங்கள் என்று இரண்டு வரி அறிக்கை விட முடியாதa...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X