புதுடில்லி: அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் என சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வந்தது. தங்களின் ‛கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், சீர்ம நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியதாவது:

2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறைக்கு யாரும் உதவ முடியாது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பற்றாக்குறை குறையும். நாங்கள் 4 முதல் 5 கோடி டோஸ் கோவிஷீல்டு மருந்துகளை இருப்பு வைத்துள்ளோம். மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்களும், ஜூலைக்குள் 30 கோடி டோஸ்களும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விரைவில் இங்கிலாந்தில் ஒப்புதல் கிடைத்துவிடும், இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE