* கர்நாடக துணை சபாநாயகர் தர்ம கவுடா ரயிலில் பாய்ந்து தற்கொலை.
* பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக டில்லியில் அஜய் என்பவர் இருவரால் கம்பால் அடித்து கொல்லப்பட்டார்.
* கிழக்கு டில்லியின் ஷகாதாரா என்ற பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடன் தர மறுத்ததால் பாட்டியை சுத்தியலால் தலையில் அடித்து கொன்ற பேரன் கரன் ஜாலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* ராஜஸ்தான் மாநிலம் பஹ்கர் என்ற கிராமத்தில் தனது மனைவியுடன் தகாத உறவு கொண்டதை அறிந்தவர் அந்த நபரை அழைத்து செருப்பு மாலை அணிவித்து கணவர் ஊர்வலமாக அழைத்து சென்று பழிதீர்த்தார்.

தமிழகத்தின் நிகழ்வு !
* அரியலூரில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் சீனிவாசன் கைது.
* திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் மொபைல் ஆப்பில் ரூ. 7 லட்சம் மாயமானது.
* சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடியே 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
*புதுக்கோட்டையில் கடந்த ஜூன் 30ம் தேதி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளி சாமுவேலுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக நடப்பு !
ஜெர்மனியில் குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசிய பெண் கைது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE