பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வேலூர் :வேலூர் , ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என 3 மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் உணவகங்கள், தங்கும்.

வேலூர் :வேலூர் , ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என 3 மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.



latest tamil news




2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் உணவகங்கள், தங்கும். விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ள தன் காரணமாக தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது.


latest tamil news



மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா நோய்த் தொற்று தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப் படுத்த வேண்டியது அவசியமாகிறது .

எனவே வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டின் புஷ்பராஜ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
30-டிச-202011:55:02 IST Report Abuse
R MURALIDHARAN தமிழன் தமிழ் வருடத்தை கொண்டாடாமல் ஆங்கில புத்தாண்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது புரியவில்லை? தமிழ் வ்யாபாரிகளான திராவிட இயக்கங்கள் நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள் ப ம ka ஏன் குரல் kodukka மறுக்கின்றனர். இதிலும் வாக்கு வங்கி அரசியலா
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-டிச-202007:15:01 IST Report Abuse
Bhaskaran சென்னையில் சில கோவில்களில் இரவு பன்னிரெண்டுமணிக்கு புத்தாண்டு பூஜையெல்லாம் கொண்டாடுவார்கள் இதெல்லாம் ஆகம விதிகளுக்கு புறம்பானது
Rate this:
Cancel
shaha.Bi - cergy95,பிரான்ஸ்
30-டிச-202002:03:58 IST Report Abuse
shaha.Bi திரூ. மாவட்ட ஆட்சி தலைவரே புது வருட தேதியை கவனிக்காமல் கையெழுத்து போட்டிருக்கிறார் . ஒன்று/ondru/2020
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X