டிச., 30, 1879
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், 1879 டிச., 30ம் தேதி பிறந்தவர் வேங்கடராமன். மதுரையில், ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.தன், 17வது வயதில் மரணம் குறித்த கேள்வி, அவருக்கு எழுந்தது. அது தொடர்பாக ஞானம் பெற, திருவண்ணாமலை சென்று, தியானம் செய்தார். திருவண்ணாமலை அடிவாரத்தில், ரமணாச்சிரமத்தை உருவாக்கினார். துவக்கத்தில், 'பிராம்மண சுவாமி' என்றழைக்கப்பட்டார். இவரது சீடர் ஒருவர் தான், அவருக்கு, 'ரமண மஹரிஷி' எனப் பெயர் சூட்டினார். இவரது உபதேசங்களின் தொகுப்பான, 'நான் யார்?' என்ற புத்தகம், பெரும் வரவேற்பைப் பெற்றது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், 1950 ஏப்., 14ம் தேதி, தன், 70வது வயதில் காலமானார்.ரமண மகரிஷி பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE