அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவி ஆசையில்லை: பிரசாரத்தில் பழனிசாமி பேச்சு

Updated : டிச 31, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
நாமக்கல்: ''முதல்வர் பதவிக்காக ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன்,'' என, நாமக்கல்லில், முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற, இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்தை, நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டம், ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர்., காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி,
முதல்வர் பதவி, ஆசையில்லை, பிரசாரம்,  பழனிசாமி

நாமக்கல்: ''முதல்வர் பதவிக்காக ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன்,'' என, நாமக்கல்லில், முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற, இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்தை, நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டம், ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர்., காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, என் ஆட்சிக்காலத்திலும், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தேன்.

இந்த திட்டம் நிறைவேறி விட்டால், அ.தி.மு.க., அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில், இத்திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என, சூழ்ச்சி செய்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதாக, ஒரு பொய்யான செய்தியை, பரப்பி வருகிறார். மக்களுக்கு நல்லது செய்வது, தி.மு.க.,விற்கு பிடிக்காது. மக்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு செய்தார். கோவில் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடம் கலந்துரையாடினார். பின், வேனில் ஏறி, பிரசாரத்தை துவக்கினார். நாமக்கல் அடுத்த முதலைப்பட்டிபுதுார் அருந்ததியர் காலனி மக்களிடம், வீடு வீடாக சென்று, அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, ஓட்டு சேகரித்தார்.

அங்கு அவர் பேசியதாவது: கிராமம் வளர்ந்தால் தான் நாடு வளரும். முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன். கடந்த ஆண்டு, அரசுப் பள்ளியில் படித்த, ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துக் கல்வியில் சேர்ந்தனர். உள் இடஒதுக்கீடு காரணமாக, இந்தாண்டு, 313 மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு, தமிழகத்தில், 11 மருத்துவ கல்லுாரிகள் செயல்பட உள்ளன. அதன்மூலம், 443 மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
முதலைப்பட்டி அருந்ததியர் காலனியில், முதல்வர், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். மக்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் விவேக் வீட்டில், டீ அருந்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
30-டிச-202023:13:42 IST Report Abuse
anbu அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
30-டிச-202017:38:48 IST Report Abuse
pradeesh parthasarathy முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை ... அப்படியென்றால் பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக வழிமொழிகிறேன் என்று சொல்லட்டும் பார்ப்போம் ...
Rate this:
Cancel
Prem -  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-202016:21:54 IST Report Abuse
Prem அப்புறம் என்ன, எலெக்ஷன்ல நிக்காத....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X