விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விழுப்புரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்சி மாணவர்கள் கொடுத்துள்ள மனு;விழுப்புரத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் பல பகுதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றோம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயிற்சி பெற்றபோது, சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்படுவதாக கூறி, வெளியேற்றிவிட்டனர்.இதையடுத்து, கடந்த ஓராண்டாக கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் உள்ள தார் சாலையில் பயிற்சி பெறுகின்றோம். கரடுமுரடான சாலையில், பயிற்சி பெறும்போது தவறி விழுந்து காயமடைகின்றோம்.
நாங்கள் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பரிசுகளை பெற்றுள்ளோம்.எங்களுக்கு மேலும் பயிற்சி அளித்தால் தேசிய அளவில் வென்று பரிசுகள் வெல்வோம். எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE