திண்டிவனம் : திண்டிவனத்தில் தேசிய மனித உரிமைகள் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனத்திலுள்ள இளமதி மகாலில், சமூக நல உரிமைகள், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவன தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், நிர்வாகிகள் தினகரன், வழக்கறிஞர்கள் ஆதித்தன், ெஹன்றிஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திண்டிவனத்தில் ராஜாங்குளத்தை சீர் செய்தது போல், மற்ற குளங்களையும் சீர் செய்ய வேண்டும், ஆட்டோக்களில் அதிக அளிவில் பயணிகளை ஏற்றிச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE