கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு தனியார் சுயநிதி நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா, சங்க ஆண்டு விழா, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். கல்வி மாவட்டத் தலைவர்கள் சிதம்பரம் பாண்டித்துரை, விருத்தாசலம் சுப்ரமணியன், கடலுார் செந்தில்முருகன், வடலுார் ராஜாராமன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் புகழேந்தி வரவேற்றார். செயலர் அய்யனார், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர். கடலுார் கல்வி மாவட்ட செயலராக வினோத், ஒருங்கிணைப்பாளராக கதிர்வேலு, சிதம்பரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அமானுல்லா, செயலராக அவினாஷ், விருத்தாசலம் கல்வி மாவட்ட செயலராக பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், தகுதியுடைய தனியார் மழலையர் பள்ளிகளை 8ம் வகுப்பு வரை தரம் உயர்த்த அனுமதி வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால் கட்டாயம் மாற்று சான்றிதழ் பெற்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE