லக்னோ:உ.பி., மாநிலத்தில் தபால் நிலையம் ஒன்றில் மும்பை தாதா சோட்டா ராஜின் படம் பொறிக்கபட்டதபால் தலை விற்பனை செய்யப்பட்டது .இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
![]()
|
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது. தபால் நிலையங்கள் புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் பழமை வாய்ந்த வரலாற்று சின்னங்கள், இடங்கள் குறித்து தபால் தலைகளை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கம். அதே நேரத்தில் தற்போதைய காலகட்டத்தில் , மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட பயனாளர் ஒருவர் தன்னுடைய படத்தை ஸ்டாம்பாக வெளியிட தபால் துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் உ.பி., மாநிலம் கான்பூர் தபால் நிலையத்தில் மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான சோட்டா ராஜன்மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இது குறித்து கான்பூர் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஹிமான்ஷூ மிஸ்ரா கூறுகையில் மை ஸ்டாம்ப் திட்டத்தில் தனிப்பட்ட பயனாளர்களின் படம் இடம் பெற செய்வதற்கான நடைமுறை மிகவும் எளிதானது. ரூ.300 கட்டணம் செலுத்தி இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடுவதில் தனிப்பட்ட பயனாளர்களான வாடிக்கையாளர்கள் தங்கள் போட்டோ அல்லது தங்களின் உறவினர்கள் போட்டோக்களுடன் வெளியிடலாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பொறுப்பாக இருக்க வேண்டும். இது போன்று விபரீதங்களில் ஈடுபடக்கூடாது.
அதே நேரத்தில் தபால் துறை ஊழியர்களும் கவனமாக இருந்திருக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்ட்டு வருகிறது என கூறினார்.
![]()
|
மேலும் போஸ்ட் மாஸ்ட்ர் ஜெனரல் விகே வர்மா கூறுகையில் மை ஸ்டாம்ப் பிரிவை நிர்வகிக்கும் நபரின் குறைபாடு எனவும், பொறுப்பாளர் ரஜ்னீஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேறு சில ஊழியர்களுக்கும் நாங்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார். தொடர்ந்து எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் நடைபெறும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE