கடலுார் : கடலுார் மத்திய மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலுார் மத்திய மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக கடலுாரைச் சேர்ந்த இன்ஜினியர் வினோத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடலுார் தொழிலதிபர் பழக்கடை மதியின் மகன் ஆவார். மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் சம்பத் பரிந்துரையில் கட்சி ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர். இவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.சென்னையில் அமைச்சர் சம்பத், அவரது மகன் பிரவின் சம்பத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE