பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி

Added : டிச 29, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் 100 பயனாளிகளுக்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நாட்டுக் கோழிகளை வழங்கினார். தமிழக அரசு ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்று திறனாளி பெண்களுக்கு தலா 25 நாட்டு கோழிகள் வழங்கப்படுகிறது.30 சதவீத பயனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் இருந்து தேர்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் 100 பயனாளிகளுக்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நாட்டுக் கோழிகளை வழங்கினார்.

தமிழக அரசு ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்று திறனாளி பெண்களுக்கு தலா 25 நாட்டு கோழிகள் வழங்கப்படுகிறது.30 சதவீத பயனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவர். விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் உள்ள 100 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 100பயனாளிகளுக்கு, தலா 25 நாட்டு கோழிகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஒன்றிய சேர்மன் செல்லதுரை, துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சுதா, கால்நடை மருத்துவர் நந்தகுமார், ஊராட்சி தலைவர் பூமாலை, ஊராட்சி துணைத் தலைவர் லலிதா, ஊராட்சி செயலாளர் செந்தில் குமார், அ.தி.மு.க., நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X