விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனை மற்றும் விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சன்மார்க்கம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.
வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெயஅண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை :விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள வள்ளலார் அருள்மாளிகையில் நாளை (31ம் தேதி) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை நடைபெறவுள்ள முகாமில், காய்ச்சல், மார்பு சளி, தோல் நோய்கள், பொது மருத்துவம், பெண்களுக்கான நோய்கள், குழந்தைகளுக்கான நோய்கள் ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு சித்த டாக்டர்கள் மூலம் ஆலோசனை, மருந்துகள் வழங்கப்படுகிறது.
நிலவேம்பு குடிநீர் வழங்கல், சித்தா, ஆயுர்வேதிக், ஓமியோ முறையில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.இதனை தொடர்ந்து, வள்ளலார் அருள்மாளிகை சார்பில், வரும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை யொட்டி, ஆதரவற்ற தெருவாசிகள் ஆயிரம் பேருக்கு பெட்ஷிட் வழங்கப்படுகிறது. ஆதரவற்றோருக்கு போர்வை அளிக்க விரும்பும் நபர்கள், சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள பெட்ஷிட்களை இங்கு வழங்கலாம்.
ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு இன்றும் நாளை ( 31ம் தேதி) ஆகிய தேதிகளில், விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 வரை டோக்கன் அளிக்கப்படுகிறது.டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே போர்வை வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE