புவனகிரி : கீரப்பாளையம் ஒன்றியம், துனிசிரமேடு ஊராட்சி பொது பணித் துறை சார்பில் முன் மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்தையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வேளாண்மை, தோட்டக்கலை, சுகாதாரம் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் கிராமங்களில் முகாமிட்டு மக்களிடம் மனு பெற்று, வளர்ச்சிப் பணி மேற்கொள்ள கீரப்பாளையம் ஒன்றியம் துனிசிரமேடு முன்மாதிரி ஊராட்சியாக தேர்வானது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.ஊராட்சித் தலைவர் ஆனந்தி செல்வராஜ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவக்குமார், ராமச்சந்திரன், மாரிமுத்து, பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் ஐயன்துறை கலந்து கொண்டு,கிராம மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.நிகழ்ச்சியில் பாக்கியராஜ், முகிலன், மணிகண்டன் பங்கேற்றனர். சுந்தர் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE