வேப்பூர் : வேப்பூரில் கார் மீது டிராக்டர் டிப்பர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
கும்பகோணம், பீமன் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், 35; தக்காளி மண்டி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் டொயோட்டா காரில் சேலத்திலிருந்து கும்பகோணத்திற்கு சென்றார். காரை வெங்கட்ராமன் ஓட்டினார்.நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் சேலம் - கடலுார் சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வந்த போது, எதிரே வந்த டிராக்டர் டிப்பர் கார் மீது மோதியது. அதில், வெங்கட்ராமன், 35 அதே இடத்தில் இறந்தார்.அவரது நண்பர் கும்பகோணம், உப்புகார தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், 30 ; காயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE