புதுடில்லி:லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் பாய் வாசவா, பா.ஜ.,வில் இருந்து விலகியுள்ளார்.
குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆறு முறை எம்.பி.யாக தேர்வானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மன்சுக் பாய் வாசவா, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, மாநில பா.ஜ., தலைவர், சி.ஆர்.பாட்டீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'கட்சியின் தீவிர விசுவாசியான நான், தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்து விட்டேன். தவறு செய்வது மனித இயல்பு.'என் தவறால், கட்சி மதிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால், ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பார்லி., கூட்டத் தொடரில், சபாநாயகரை சந்தித்து, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், மன்சுக் பாய் வாசவா தெரிவித்துள்ளார். அவர், சமீப காலமாக, கட்சியின் செயல்பாடுகள், தொகுதி பிரச்னைகளில் அரசின் அக்கறையின்மை ஆகியவை குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தார்.
நர்மதா மாவட்டத்தில், 120 கிராமங்களை, சுற்றுச் சூழல் பதற்ற மண்டலமாக அறிவிக்கப் பட்டதை திரும்பப் பெறக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா குறித்து, மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் பாரத் பாண்டியா கூறும்போது,'' மூத்த எம்.பி.,யாக உள்ள, மன்சுக் பாய் வாசவாவின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்படும்,'' என, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE