மத மாற்ற தடை அவசர சட்டம் ம.பி., அமைச்சரவை ஒப்புதல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
போபால்:திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக, கட்டாய மத மாற்றம் செய்வதை தடுக்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய பிரதேச அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. 'திருமணம் செய்வதற்காக, ஹிந்துப் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில், புதிய சட்டம் அமல்படுத்தப்படும்' என,

போபால்:திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக, கட்டாய மத மாற்றம் செய்வதை தடுக்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய பிரதேச அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. 'திருமணம் செய்வதற்காக, ஹிந்துப் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில், புதிய சட்டம் அமல்படுத்தப்படும்' என, மாநில அரசு அறிவித்திருந்தது.

ஏற்கனவே, உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், புதிய அவசர சட்டத்துக்கு, மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு, கவர்னர் ஆனந்திபென் படேலுக்கு, சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.

இந்த புதிய அவசர சட்டத்தின்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டு வரை சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X