அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி முடிவு ஏமாற்றம் அளிக்கிறது: கமல்

Updated : டிச 31, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மயிலாடுதுறை: ''ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். மயிலாடுதுறையில், நேற்று கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: வழியெங்கும் மக்கள் அளித்த வரவேற்பு, தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது.
ரஜினி, ஏமாற்றம் , கமல்

மயிலாடுதுறை: ''ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மயிலாடுதுறையில், நேற்று கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: வழியெங்கும் மக்கள் அளித்த வரவேற்பு, தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது. காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள் தான்; ஒருவரை தவிர. நான் யாருக்கும் அடிமை இல்லை. நான் யாருக்கும் அரசன் இல்லை.

கல்வி பட்ஜெட்டில், ஒரு மாணவனுக்கு, 45 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனால், பள்ளிகள் தரமானதாக இல்லை. சாகாமலேயே நரகத்தை பார்க்க வேண்டும் என்றால், தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் போதும்.

மக்கள் நீதி மையம் கட்சி, அரசியல் பழி போடும் கட்சி அல்ல. அரசியல் பழிவாங்கும் கட்சியும் அல்ல. வழிகாட்டும் அரசியல். எங்கள் கட்சியை மரியாதை இல்லாமல் விமர்சிப்பவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யமாட்டோம். நாங்கள் வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு பதில் சொன்னாலே போதுமானது. ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


முன்னதாக நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பெண்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், கமல்ஹாசன் பேசியதாவது:
கொரோனா காலத்தில் வெளியில் செல்ல வேண்டாம். கூட்டத்திற்கு நடுவில் போகாதீர்கள் என்றனர். அவர்களிடம் நான், கூட்டத்திற்கு நடுவில் செல்லவில்லை. என் குடும்பத்திற்கு நடுவில் செல்கிறேன். பேசுகிறேன் என்றேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பொது இடத்தில் பாலியல் சீண்டலுக்காக போலீஸ்காரருக்கு தர்ம அடி விழுகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில், 600 நாட்களை கடந்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஜன-202111:50:17 IST Report Abuse
Malick Raja சினிமா உலக நாடுகள் அனைத்திலும் இருக்கிறது .. ஆனால் அது ஒரு பொழுது போக்காக பார்க்கப்படுகிறது .. சினிமா நடிகர்கள் வெளியுலகில் உலாவந்தால் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள் ..அவர்கள் கூலி பெற்று நடக்கிறார்கள் மக்கள் பொழுது போக்கிற்கு பார்க்கிறார்கள் இது உலக நாடுகள் நியதி ..இந்தியாவில் விதிவிலக்கு அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடிப்பவர்கள் சிலரை தூக்கிப்பிடித்துக்கொன்டு அலைவது அறிவீனம் என்பதை அறியா அறிவிலிகள் இருக்கிறார்கள் என்பது உண்மை ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-டிச-202019:49:32 IST Report Abuse
sankaseshan காமஹாச உலக்கைநாயகன் உள்ளூர சந்தாஷத்தில் இருப்பான் தடை விலகி விட்டதென்று . ஆனால் இவன் நினைப்பது நடக்காது .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-டிச-202017:42:54 IST Report Abuse
Indhuindian உலக நாயகனின் உலக மஹா நடிப்புடோய் சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X