சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் தங்கிய முதலை சிக்காததால் மக்கள் அச்சம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
கிள்ளை : கிள்ளை எடப்பாளையம் குளத்தில் தங்கிய முதலை பிடிப்படாததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிள்ளை எடப்பாளையம் அரசு பள்ளி அருகே உள்ள குளத்தில் கடந்த 27 ம் தேதி ஒரு முதலையை பார்த்த அப்பகுதியினர், பிச்சாவரம் வனத்துறைக்கு தெரிவித்தனர்.வனத்துறை காப்பாளர்கள் ராஜேஷ், செல்வம், சரண்யா வந்து குளத்தில்,முதலை இருப்பதை உறுதி செய்தனர். கிள்ளை பேரூராட்சி மூலம் குளத்தில்

கிள்ளை : கிள்ளை எடப்பாளையம் குளத்தில் தங்கிய முதலை பிடிப்படாததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கிள்ளை எடப்பாளையம் அரசு பள்ளி அருகே உள்ள குளத்தில் கடந்த 27 ம் தேதி ஒரு முதலையை பார்த்த அப்பகுதியினர், பிச்சாவரம் வனத்துறைக்கு தெரிவித்தனர்.வனத்துறை காப்பாளர்கள் ராஜேஷ், செல்வம், சரண்யா வந்து குளத்தில்,முதலை இருப்பதை உறுதி செய்தனர். கிள்ளை பேரூராட்சி மூலம் குளத்தில் இருந்த தண்ணீரை கடந்த இரண்டு நாட்களாக இறைத்தனர்.நேற்று வனத்துறை மூலம் முதலை பிடிக்கும் நந்திமங்களம் பகுதியை சேர்ந்த ராஜி குழுவினர்கள் 10 பேர், குளத்தில் இறங்கி வலை மூலம் தேடிபார்த்தனர். ஆனால், முதலை சிக்கவில்லை.

இதனால், அப்பகுதியினர்அச்சமடைந்துள்ளனர்.மழை வெள்ளத்தின்போது, இந்த குளத்திற்கு வந்த முதலை, தற்போது, பக்கிரி வாய்க்கால் அல்லது வடிகால் வாய்க்காலுக்கு சென்றிருக்கலாம். இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினர்அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X