சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு பேரை கத்தியால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

Added : டிச 29, 2020
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே நான்கு பேரை கத்தியால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டனைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விஜய், 21; அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி, 58; இவரது மனைவி தேன்மொழி, 43; பா.ஜ., கடலுார் மாவட்ட செயலாளர். தங்கசாமியின் மகள் திலகவதி தலைவியாக உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் விஜய்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே நான்கு பேரை கத்தியால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டனைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விஜய், 21; அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி, 58; இவரது மனைவி தேன்மொழி, 43; பா.ஜ., கடலுார் மாவட்ட செயலாளர். தங்கசாமியின் மகள் திலகவதி தலைவியாக உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் விஜய் வீட்டில் குழு கடன் பெற்றனர். கடனை திரும்ப கேட்டதால் கடந்த 27 ம் தேதி இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த தங்கசாமி, மனைவி தேன்மொழி, மகள் திலகவதி, 23; உட்பட 12 பேர் விஜய் வீட்டில் நுழைந்து ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் விஜய், சகோதரர் விக்னேஷ், உறவினர்கள் ராஜா, மணிகண்டன் ஆகியோர் காயமடைந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து பா.ஜ., பிரமுகர் தேன்மொழி உள்ளிட்ட 12 பேர் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தங்கசாமியை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வந்தனர். இதில் சத்தியமூர்த்தியை நேற்று கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X