பொது செய்தி

இந்தியா

போலீசில் 5.31 லட்சம் பணியிடங்கள் காலி

Added : டிச 29, 2020
Share
Advertisement
புதுடில்லி:நாடு முழுதும் போலீஸ் துறையில், 5.31 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. மத்திய ஆயுதப் போலீஸ் படைகளில், 1.27 லட்சம் இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுதும் மாநில போலீஸ் துறைகளின் கீழ், ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள், 26 லட்சத்து, 23 ஆயிரத்து,

புதுடில்லி:நாடு முழுதும் போலீஸ் துறையில், 5.31 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

மத்திய ஆயுதப் போலீஸ் படைகளில், 1.27 லட்சம் இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும் மாநில போலீஸ் துறைகளின் கீழ், ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள், 26 லட்சத்து, 23 ஆயிரத்து, 225. இதில், இம்மாத இறுதி நிலவரப்படி, 20 லட்சத்து, 91 ஆயிரத்து, 488 பேர் பணியில் இருப்பர். அதன்படி, மொத்தம், ஐந்து லட்சத்து, 31 ஆயிரத்து, 737 பணியிடங்கள் காலியாக இருக்கும்.கடந்த ஆண்டில் மட்டும், பெண்கள் போலீஸ் துறையில் இணைவது, 16.05 சதவீதம் உயர்ந்துள்ளது.

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட, மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள், 11 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 511. இதில், ஒன்பது லட்சத்து, 82 ஆயிரத்து, 391 பேர் பணியில் இருப்பர்.அதன்படி, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 120 பணியிடங்கள் காலியாக இருக்கும்.

மத்திய படைகளில், 2.98 சதவீதம், அதாவது, 29 ஆயிரத்து, 249 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். நாடு முழுதும், 800 போலீஸ் மாவட்டங்களில், 16 ஆயிரத்து, 955 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X