மயிலம் : மயிலம் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.
மயிலம் அடுத்த பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி உலகநாதன்,55: நேற்று குடும்பத்தினர் அனைவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் பகல்12:00 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதற்கு முன்பாக வீடு முழுதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.இதில் வீட்டில் பீரோவில் இருந்த நிலம் மற்றும் வீட்டு பத்திரங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உட்பட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி சாம்பலாகின.தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE