விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் பிளேடால் கையை கிழித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள், 60; இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, திடீரென தான் வைத்திருந்த பிளேடால், கையில் கிழித்துக் கொண்டு சத்தம்போட்டார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் பெருமாளை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில், பெருமாளை அவரது மகன் அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை செய்வதாகமிரட்டுவதாகவும்கூறினார்.இதையடுத்து, பெருமாளை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE