சேத்தியாத்தோப்பு : கிரியேட், நமது நெல்லை காப்போம் இயக்கம், நுகர்வோர் உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பேரவை, பாரம்பரிய விதைப் பண்ணை சார்பில் இயற்கை வேளாண் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் மழவராயநல்லுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
வடலுார் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவர் கோவி கல்வி ராயர் தலைமை தாங்கினார். பாரம்பரிய விதை நெல் பண்ணை தலைவர் செல்வம் வரவேற்றார். மழவராயநல்லுார் ஊராட்சித் தலைவர் பிருந்தாவதி வரதராஜன் முன்னிலை வகித்தார். கிரியேட் நமது நெல்லை பாதுகாப்போம் இயக்க தலைவர் துரைசிங்கம் சிறப்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், பாரம்பரிய நெல் சாகுபடி முன்னோடி விவசாயி வெய்யலுார் ராமதாஸ், வட்டத்துார் ஸ்டாலின் கருத்துரை வழங்கினர்.
விவசாயிகள் இமயவரம்பன், ஜெயங்கொண்டம், அணைக்கரை, ஆண்டிமடம், பெண்ணாடம் பகுதி முன்னோடி பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். உழவுக்கரங்கள் அமைப்பு வீரத்தமிழன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE