கடலுார் : குடிபோதையில் டிரைவரை தாக்கி ஆட்டோவை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் தாஸ் மகன் சஞ்சய், 23; ஆட்டோ டிரைவரான இவர், நாகம்மன் கோவில் அருகில் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேஷ், 19; உட்பட 3 பேர் குடிபோதையில் கத்தியுடன் வந்து சஞ்சய்யிடம் ஆட்டோவை இங்கு தான் நிறுத்துவாயா எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, ஆட்டோவின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ், 19; செந்தில் மகன் சந்துரு, 21; ஆகியோரை கைது செய்து, ராஜியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE