புவனகிரி : கீரப்பாளையம் ஒன்றிய அலுவலக துணை பி.டி.ஓ., பொறுப்பேற்றார்.
கீரப்பாளையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ.,வாக பணி புரிந்த கணேஷ் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். அன்று முதல் இப்பணி கூடுதல் பொறுப்பில் இருந்து வந்தது.புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல் நிலைஉதவியாளராக பணிபுரிந்த பாபு பதவி உயர்வு பெற்று, கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ.,வாக(நிர்வாகம்) பொறுப்பேற்றார்.
அவரை சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர், துணைச் சேர்மன் காஷ்மீர் செல்வி விநாயகம், ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியம் (வட்டார ஊராட்சி), விமலா (கிராம ஊராட்சி) மற்றும் அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE