வாஷிங்டன்:'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவை, பார்லிமென்ட் நிராகரித்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். ஜன., 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து வருகிறார்.இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான, 55 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் மசோதா, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.
ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி, தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க, அதிபர் டிரம்ப் மறுத்தார்; இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், அதிபரின் முடிவை நிராகரிக்கும் வகையில், அமெரிக்க பார்லி.,யில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள, பிரதிநிதிகள் சபையில், இந்த மசோதா நிறைவேறியது. டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 எம்.பி.,க்கள், மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.பார்லி.,யின் இந்த நடவடிக்கை, டிரம்புக்கு மற்றொரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE