இஸ்லாமாபாத்:புவிசார் குறியீடு பதிவு செய்யாமலேயே, பாசுமதி அரிசிக்கு, பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.
பிரியாணி போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்க, பாசுமதி ரக அரிசி பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில், ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பதற்கு, அந்தந்த நாடு, புவிசார் குறியீட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், பாசுமதி அரிசிக்கு அங்கீகாரம் கேட்டு, ஐரோப்பிய யூனியனில், இந்தியா விண்ணப்பித்துள்ளது.
இதை எதிர்த்து, 'எங்களுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும்' என, ஐரோப்பிய யூனியனில், பாகிஸ்தான் முறையீடு செய்துள்ளது.இது குறித்து, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தான் ஆண்டுக்கு, ஏழு லட்சம் டன் வரை, பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. அதில், 2.50 லட்சம் டன் வரை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.புவிசார் குறியீடு பதிவு தொடர்பாக, இந்தாண்டு மார்ச்சில், புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், பாசுமதி அரிசிக்கு, புவிசார் குறியீடுக்கு அதில் பதிவு செய்யப்படவில்லை.குறிப்பிட்ட நாட்டில் புவிசார் குறியீடு பதிவு செய்யப்படாத நிலையில், சர்வதேச சந்தையில், அதற்கு உரிமை கோர முடியாது.இதனால், பாகிஸ்தானைச் சேர்ந்த, பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE