ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், இந்தாண்டில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்களில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் நடப்பாண்டில் ராணுவம், சி.ஆர்.பி.எப்., மற்றும் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில், 166 பேர், உள்நாட்டு பயங்கரவாதிகள்; 37 பேர் பாகிஸ்தான் உட்பட பிற நாட்டினர். பொது இடங்களில் நடந்த, 96 பயங்கரவாத தாக்குதல்களில் மக்கள், 43 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் கனிகம் பகுதியில், பயங்கரவாதிகளுடன் சமீபத்தில் நடந்த, 'என்கவுன்டரில்' ராணுவ வீரர் தோமர், 40, காயம் அடைந்தார்.ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீர மரணம் அடைந்தார்.
காண்டர்பால் பகுதியில், சமீபத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உதவி எஸ்.ஐ., நேத்ரபால் சிங் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அவர் பலியானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE