சிதம்பரம் : சிதம்பரம் நகர த.மா.கா., சார்பில் வாசன் பிறந்த நாளையொட்டி மேலவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர தலைவர் தில்லை மக்கின் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், வைத்தி, பொது செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார் முன்னிலை வகித்தனர். கடலுார் மத்திய மாவட்ட மகளிரணித் தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மேலிட பார்வையாளர் முனவர் பாஷா, மாவட்ட தலைவர் புரட்சிமணி, மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன், பங்கேற்று 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தர் , தில்லை செல்வி, சுப்புலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலா, மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன், சேது மாதவன், நகர நிர்வாகிகள் சின்ராஜ், இளங்கோவன், நடராஜன், முருகன், ராஜ்குமார், தினேஷ் குமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜனகம், மீனா, ருக்மணி, மாலா, ராதா, நிர்வாகிகள் சிங்காரவேலு, ராஜ்குமார், சாய் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேஷ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE