அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் தி.மு.க.,வினர் பலர் ஜெயிலுக்கு செல்வார்கள்: அமைச்சர் சண்முகம் உறுதி

Added : டிச 29, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம் : தி.மு.க.,வில் 22 அமைச்சர்கள், 75 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு உள்ளது, கூடிய விரைவில் இவர்கள் ஜெயிலுக்கு செல்வர் என அமைச்சர் சண்முகம் பேசினார். ரிஷிவந்தியம் அடுத்த ஓடியந்தலில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது,அதில் வெற்றி பெறுவது கட்டாயம். நிர்வாகிகள் தங்களுக்குள்

ரிஷிவந்தியம் : தி.மு.க.,வில் 22 அமைச்சர்கள், 75 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு உள்ளது, கூடிய விரைவில் இவர்கள் ஜெயிலுக்கு செல்வர் என அமைச்சர் சண்முகம் பேசினார்.

ரிஷிவந்தியம் அடுத்த ஓடியந்தலில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது,அதில் வெற்றி பெறுவது கட்டாயம். நிர்வாகிகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, இளைஞர்களை ஒன்றிணைத்து பாடுபட வேண்டும். அ.தி.மு.க., அரசின் 10 ஆண்டு கால திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், வியாபாரிகளை தாக்கி அடாவடி வசூல் செய்வர்.

கடந்த 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில் நடந்ததை சிந்தித்து,மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மக்கள் மறந்து விடுவர் என்பதால், பொய் கூறி கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து, ஆட்சியை பிடித்து விடலாம் என கங்கனம் கட்டி அலைகின்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியாது. கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம், கொலை, கந்துவட்டி, நிலஅபகரிப்பு மட்டுமின்றி கண்ணில் பட்டதையெல்லாம் தனக்கு வேண்டும் என தி.மு.க., வினர் நினைப்பர்.

தி.மு.க.,வில் 22 முன்னாள் அமைச்சர்கள், 75 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு உள்ளது. இவற்றின் விசாரணை முடிந்ததும் விரைவில் ஜெயிலுக்கு செல்வர்.தி.மு.க., தொண்டனால் உயர் பதவிக்கு செல்ல கனவு காணமுடியாது. ஆனால் அ.தி.மு.க., வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக கனவு காணலாம். எனவே ஒற்றுமையாக இருந்து களப்பணியாற்றி, தேர்தல் பணியினை இன்றே துவக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X