சென்னை:வரும், 2ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் செய்திக்குறிப்பு:தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், 3.1 முதல், 4.5 கி.மீ.,க்கு இடைப்பட்ட உயரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், அதையொட்டிய மாவட்டங்களில், லேசான மழையும் பெய்யும்.
வரும், 1, 2ம் தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யும். நாளை முதல் குமரி கடல் பகுதியில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால், மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல், 2ம் தேதி வரை, குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகரில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 30; குறைந்த பட்சம், 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், 1 செ.மீ., மழை பதிவானது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE