செஞ்சி : அதிக காவல் நிலையங்கள் உள்ள இடங்களில் கூடுதலாக உட்கோட்டங்கள் மறு ஆய்வு மூலம் துவங்கப்படும் என வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன் தெரிவித்துள்ளார்.
செஞ்சி உட்கோட்ட டி.எஸ்.பி., அலுவலகத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஆண்டு வழக்குகளின் விபரம், முடிக்கப் பட்டுள்ள விபரங்கள் மற்றும் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்த ஐ.ஜி., நாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது;விபத்தில்லாமல் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட விழுப்புரம் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்த இடங்களை பட்டியல் எடுத்து கூடுதல் கண்காணிப்பு போடப்படும்.
நாளை (31ம் தேதி) புத்தாண்டை யொட்டி, மாவட்டங்களில் இரவு 8.00 மணி முதல் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதிவேகமாக வருதல், போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் அதிக காவல் நிலையங்கள் உள்ள உட்கோட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, கூடுதலாக துணை கண்காணிப்பாளர் உட்கோட்டங்கள் துவங்கப்படும். மேல்மலையனுாரில் விரைவில் காவல் நிலையம் துவங்கப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், திறக்கப்படும் என தெரிவித்தார். எஸ்.பி., ராதாகிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE