அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியை விமர்சித்தது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்!

Added : டிச 29, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை:'காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தது ஏன்' என்பதற்கு, நடிகை குஷ்பு, விளக்கம் அளித்தார்.திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டசபை தொகுதி, பா.ஜ., நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இத்தொகுதி பொறுப்பாளர் குஷ்பு பேசியதாவது:இந்த தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் என யார் நிறுத்தப்பட்டாலும், அவர் நிச்சயமாக
 மோடியை விமர்சித்தது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்!

சென்னை:'காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தது ஏன்' என்பதற்கு, நடிகை குஷ்பு, விளக்கம் அளித்தார்.

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டசபை தொகுதி, பா.ஜ., நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இத்தொகுதி பொறுப்பாளர் குஷ்பு பேசியதாவது:இந்த தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் என யார் நிறுத்தப்பட்டாலும், அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த எனக்கு, பா.ஜ.,வில் தற்போது, அதை விட குறைந்த பொறுப்பு அளித்துஉள்ளனர் என, அனைவரும் பேசினர்.

ஆனால், தற்போது தான் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய அளவில் பொறுப்பில் இருந்தபோது, 'ஏசி' அறையில் உட்கார்ந்து, எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வேலை மட்டும் தான் இருக்கும்.காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது, மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் கூட, எதிர்க்கட்சி என்ற காரணத்தால், வேறு வழியின்றி விமர்சித்தேன். இவ்வாறு, அவர் பேசினார்.

பின், நிருபர்களிடம், குஷ்பு கூறியதாவது:முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பா.ஜ., தலைமை தான், கூட்டணி குறித்தும், வேட்பாளர் குறித்தும் முடிவு செய்யும். உதயநிதி, நடிகராக இருக்கலாம். அவருக்கு அரசியலில், என்ன அனுபவம் இருக்கிறது? கருணாநிதி, ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, உதயநிதி வெற்றி பெற முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, குஷ்பு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
30-டிச-202023:05:32 IST Report Abuse
S.Ganesan வடிவேல் காமெடி போலத்தான் " அது வேற வாய் "
Rate this:
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
30-டிச-202023:04:51 IST Report Abuse
Khalil காட்டியும் கொடுப்போம் ..
Rate this:
Cancel
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
30-டிச-202019:13:07 IST Report Abuse
Sadagopan Varadhachari அசிங்கமெல்லாம் பார்த்தால் அரசியலில் இருக்கமுடியாது.2016 ல் கொலைகாரன் என்ற பட்டம் கொடுத்து , 2021 ல் வருங்கால முதல்வரே என்று கூவுவது விட கேவலம் வேறு உண்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X