சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரின் மரணத்திற்கு காரணம் என்ன? கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்!

Added : டிச 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:சென்னையில், நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கணவர் மரணம் அடைந்ததை அடுத்து, அதற்கான காரணம் தெரியாமல், கைக் குழந்தையுடன் பெண் ஒருவர் போராடி வருகிறார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நிதி நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல். சிங்கப்பூரில், ஜே.சி.பி.,இயந்திரம் இயக்குபவராக வேலை பார்த்து வந்த இவர், ஜூன், 25ல் சென்னை
 கணவரின் மரணத்திற்கு காரணம் என்ன? கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்!

சென்னை:சென்னையில், நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கணவர் மரணம் அடைந்ததை அடுத்து, அதற்கான காரணம் தெரியாமல், கைக் குழந்தையுடன் பெண் ஒருவர் போராடி வருகிறார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நிதி நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல். சிங்கப்பூரில், ஜே.சி.பி.,இயந்திரம் இயக்குபவராக வேலை பார்த்து வந்த இவர், ஜூன், 25ல் சென்னை திரும்பினார்.


சந்தேகம்



கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட இவர், சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அங்கு திடீரென மரணம் அடைந்தார்.அவருக்கு சந்திரா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. சுந்தரவேலின் மரணத்திற்கு காரணம் தெரியாமல், கைக்குழந்தையுடன் சந்திரா, காவல் நிலையம் உட்பட, பல்வேறு அரசு அலுவலக படிகளை ஏறி வருகிறார்.

சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சந்திரா அளித்த பேட்டி:என் கணவர், நாற்காலியில் அமர்ந்தவாறு, இறந்த நிலையில் இருந்தார் என, நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் சார்பில், எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனாம்பேட்டை போலீசார், 'என் கணவர், கழிப்பறையில், நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். 'அவர் தங்கி இருந்த அறையில் தரப்பட்ட உணவில் பூஞ்சைகள் படர்ந்து இருந்தன' என, தெரிவித்தனர்.

இரு தரப்பினரின் பதிலும் முரணாக உள்ளது.சிங்கப்பூரில் இருந்து, என் கணவர் கொண்டு வந்த, 40 ஆயிரம் ரூபாயில், 700 ரூபாய் மட்டுமே இருந்தது. கணவர் தங்கி இருந்த அறையில், அவர் தங்கம் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் இருந்தன. ஆனால், தங்கம் ஏதும் இல்லை.பிரேத பரிசோதனை அறிக்கையிலும், என் கணவரின் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. நகை, பணத்திற்காக, என் கணவரை யாரோ கொலை செய்து விட்டனர் என, சந்தேகிக்கிறேன்.


நடுத்தெருவில் நிற்கிறேன்

என் கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு, தேனாம்பேட்டை காவல் நிலையம், சென்னை, கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சி.பி.சி.ஐ.டி., மற்றும் மனித உரிமை அலுவலகம் என, பல அரசு அலுவலகங்களின் படிகளை ஏறி வருகிறேன். எல்லாரும் துரத்தி அடிப்பதிலேயே குறியாக உள்ளனர். என் கணவர் இறந்த நிலையில், கைக் குழந்தையுடன் அனாதையாக நடுத்தெருவில்நிற்கிறேன். அரசு தக்க பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
30-டிச-202011:34:39 IST Report Abuse
Ajaykumar முதல்வர் அல்லது பிரதமர் அலுவலகம் சென்றால் நிதி கிடைக்கும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-202002:09:02 IST Report Abuse
தமிழவேல் மனதிடம் வேண்டும் சகோதரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X