அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன

Added : டிச 29, 2020
Share
Advertisement
சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சங்கராபுரம் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் பூட்டை ரோடில் திறந்த வெளி மைதானத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அரசு, கிருஷ்ண மூர்த்தி,

சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சங்கராபுரம் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் பூட்டை ரோடில் திறந்த வெளி மைதானத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அரசு, கிருஷ்ண மூர்த்தி, அய்யம்பெருமாள், ரவி, ஆப்பிள், நகர செயலாளர்கள் சின்னசேலம் குணசேகரன், வடக்கநந்தல் கருப்பன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு வக்கீல் தாமரைசெல்வன், குமரவேல், பாண்டியன், பவுல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சாபிள்ளை, விவசாய அணி செயலாளர் சன்னியாசி, பாசறை செயலர் ராகேஷ், வக்கீல் பிரிவி செயலாளர் சீனிவாசன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது;கடந்த 4 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்று கின்றன. தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.அ.தி.மு.க., வில் சாதாரண தொண்டர் முதல் நிர்வாகி வரை யார் வேண்டுமானாலும் உயர்பதவிக்கு வரமுடியும். ஆனால் தி.மு.க.,வில் இது போல் முடியாது. அ.தி.மு.க., அரசின் 10 ஆண்டு சாதனைகளை வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும். நடுநிலையாளர்களின் வாக்குகளை கணக்கெடுத்து அவர்களின் வாக்குகளை பெறவேண்டும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெ., ஆட்சி மீண்டும் தொடர அ.தி.மு.க., தொண்டர்கள் இன்று முதல் ஒற்றுமையாக செயல்பட்டு தி.மு.க.,விற்கு டெபாசிட் கிடைக்காத வகையில், அ.தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் 3 வது முறையாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X