மதுரவாயல் : மதுரவாயல் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில், ஆறு இருசக்கர வாகனங்களை, தீயிட்டு எரித்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த, ஆறு இருசக்கர வாகனங்கள், நேற்று மர்மமான முறையில் எரிந்தன. தகவலறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில், 30 வயது பெண், வாகனத்தை தீயிட்டு எரித்தது தெரியவந்தது.தொடர் விசாரணையில், சம்பவம் நடந்த வீட்டில் வசிக்கும் பழனி என்பவரின் கள்ளக்காதலியான, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த திவ்யா என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அவருக்கும், பழனியின் மனைவிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திவ்யா, பழனியின் மனைவியை பழிவாங்கவே, அவரது இருசக்கர வாகனத்தை எரித்தார் என்பது, விசாரணையில் தெரியவந்தது.திவ்யாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE