கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு பயணியருக்கு ' வைரஸ்' பரிசோதனை?

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை:இந்தியா வரும் வெளிநாட்டு பயணியர் அனைவருக்கும், வைரஸ் பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ளும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:இந்தியாவில், 16.81 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று இருந்த, 97.61 லட்சம் பேர்

சென்னை:இந்தியா வரும் வெளிநாட்டு பயணியர் அனைவருக்கும், வைரஸ் பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ளும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:இந்தியாவில், 16.81 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று இருந்த, 97.61 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். 1.47 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

கடந்த, பிப்., மார்ச் மாதங்களில், இந்தியா வந்த சர்வதேச பயணியரை கட்டுப்படுத்தியிருந்தால், கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இருந்திருக்கும். ஆனால், சீனாவில் இருந்து வரும் பயணியரை மட்டும், மத்திய அரசு கட்டுப்படுத்தியது. சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, பிரிட்டிஷ், இத்தாலி, இலங்கை நாடுகளின் விமானங்களில் வந்த பயணியர் வாயிலாக, வைரஸ் பரவியது.தற்போதும், பிரிட்டிஷ் பயணியரை மட்டுமே, மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. பிப்., மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை, மீண்டும் மத்திய அரசு செய்கிறது.

உருமாறிய வைரஸ், லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்ற நாடுகளில் இருந்து லண்டன் சென்றவர்களுக்கும், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்.எனவே, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணியர் அனைவரையும், கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களுக்கு, அறிகுறி இல்லாமல் இருக்கலாம். வரும் முன் காப்பது நல்லது என்பதால், வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் வழியாக வரும் பயணியர் அனைவரையும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அவர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.மீண்டும் பரிசோதனை செய்து, அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின், அவர்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X