சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : டிச 29, 2020
Share
Advertisement
பயணியரிடம் திருடியவர் பிடிபட்டார்கோயம்பேடு: திருவொற்றியூரைச் சேர்ந்தவர்கள் சின்னதுரை, 43, பாலு, 28. இருவரும், நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், பஸ்சில் அமர்ந்திருந்தனர். அப்போது, மர்மநபர், இருவரது மொபைல் போனை திருடி தப்ப முயன்றார். பொதுமக்கள் உதவியுடன், திருடனை மடக்கி பிடித்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், விழுப்புரத்தைச்

பயணியரிடம் திருடியவர் பிடிபட்டார்கோயம்பேடு: திருவொற்றியூரைச் சேர்ந்தவர்கள் சின்னதுரை, 43, பாலு, 28. இருவரும், நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், பஸ்சில் அமர்ந்திருந்தனர். அப்போது, மர்மநபர், இருவரது மொபைல் போனை திருடி தப்ப முயன்றார். பொதுமக்கள் உதவியுடன், திருடனை மடக்கி பிடித்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிந்தன், 37, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் காவலர் படுகாயம் மணலி: சென்னை அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்தவர் முருகன், 52; திருவொற்றியூர் போக்குவரத்து காவல் பிரிவில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்றார். பொன்னேரி சாலையில், மணலி புதுநகர் அருகே, சரக்கு பெட்டக லாரி மீது மோதி, பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுனர் குபேந்திரன், 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் நகை பறித்தோர் கைது செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி, ஜெயச்சந்திரன் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 46. நேற்று முன்தினம், வீட்டு வாசலில் கோலம் போடும்போது, மர்ம நபர், இவரது ஐந்து சவரன் செயினை பறித்து சென்றார். செங்குன்றம் போலீசார் விசாரித்தனர். இதில், தீர்த்தகிரையம்பட்டைச் சேர்ந்த ராஜா, 41, என்பவரும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் கவிதா, 40, என்பவரும் சிக்கினர். ராஜா, புள்ளிலைன் ஊராட்சியில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது, தன்னிடம் நட்பாக பழகிய கவிதாவின் திட்டப்படி, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று காலை, இருவரையும் கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்றோருக்கு 'காப்பு!'சாஸ்திரி நகர்: பெசன்ட்நகர், பெசன்ட் அவென்யூ சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாஸ்திரி நகர் போலீசார் வாகன சோதனையின்போது, ஆட்டோ ஒன்றை மறித்து விசாரித்தனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த பைசல் முகமது, 33, செந்தில்குமார், 33, என்பதும், மாதவரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பெசன்ட் நகரில் விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது, மீனம்பாக்கம், அயனாவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், வழிப்பறி, கஞ்சா வழக்குகள் உள்ளன. இருவரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சா, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் ஊராட்சி, புதுநகர், வலம்புரி செல்வ விநாயகர் தெருவில், 'ஏலக்காய்' என்ற சங்கேத பெயரில், கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவது குறித்து, புழல் உதவி கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று முன்தினம் மாலை, அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சோழவரம், கோமதி அம்மன் நகரைச் சேர்ந்த பிரபாகரன், 29, சரவணன், 23, ஆகியோர் சிக்கினர். அவர்களிடம், 50 பொட்டலங்களில் இருந்த, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடையில் ரூ.35,000 திருட்டு ஆவடி: ஆவடி, வெள்ளானுாரில், தனியார் கல்லுாரி அருகே, அலெக்ஸ் ராஜபாண்டியன், 34, என்பவர், ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். இவர் வீடு, அருகே இருப்பதால், ஷட்டரை மூடாமல் வீட்டிற்குச் சென்று மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். வழக்கம்போல, நேற்று முன்தினம் மதிய உணவிற்கு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின், கடைக்குச் சென்றபோது, கல்லாவில் இருந்த, 35 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.2.5 லட்சம், மொபைல் 'அபேஸ்!'செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன், 53. இவர், நேற்று முன்தினம் மாலை, ஆவண நகல் வாங்குவதற்காக, தீர்த்தகிரையம்பட்டில் உள்ள, செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை, அலுவலகம் அருகே நிறுத்தி சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த, 2.5 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்கள் திருடு போயிருந்தன. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X