கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார்.
நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலம், லதார் மாவட்டத்தில் இருந்து கன்ட்ரோல் யூனிட்-2,080, பேலட் யூனிட்-2,730, விவிபாட்-2,250 ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இவைகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் 'ஸ்கேன்' செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி நேற்று முழுவீச்சில் துவங்கியது.இப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கிரண்குராலா நேற்று பார்வையிட்டார். அத்துடன் வளாகத்தினை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் உள்ளிட்ட பாதுகாப்புகள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது டி.ஆர்.ஓ.,சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE